115 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கிளிநொச்சி சுண்டிக்குளம் பகுதியில் ஒருதொகை கேரள கஞ்சாவுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கிளிநொச்சி  உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரத்னாயக்கவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய, இந்தக் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


கிளிநொச்சி மாவட்ட சட்டவிரோத செயற்பாடுகள் ஒழிப்பு பிரிவு  பொலிஸ் குழுவினர் மற்றும் கல்லாறு இளைஞர்களின் உதவியுடன் குறித்த பகுதி சுற்றிவளைத்துத் தேடுதல் மேற்கொள்ளப்பட்டது. 


தேடுதலின் சுட்டிக்குளம் சாளைப் பகுதியில் வைத்து சூட்சுமமாக வாகனம் ஒன்றில் கடத்தப்பட்ட சுமார்  115 கிலோ கிராம் எடையுடைய கேரளா கஞ்சா பொலிஸாரால் மீட்கப்பட்டது.


கஞ்சாவைக் கடத்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட வாகனம் மற்றும் வாகனத்தை செலுத்திய சாரதி உட்பட மூவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.


கடல்வழியாகக் கொண்டு வரப்பட்ட கஞ்சா பின்னர் சுண்டிக்குளம் கடற்கரையில் இறக்கப்பட்டு  வாகனத்தில் கடத்தப்பட்ட போதே பொலிஸாரிடம் சிக்கியது.


குறித்த தேடுதல் பணிக்காக பொலிஸ் குற்றத் தடகவியல் பொலிசாரின் மோப்ப நாயும் பயன்படுத்தப்பட்டுள்ளது. 


சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் மற்றும் கிளிநொச்சிப் பொலிஸார் இணைந்து  முன்னெடுத்து, வருகின்றனர்.
Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment