ஞானசார தேரரின் காலக்கெடு 12 மணியுடன் நிறைவு, பரபரப்பாகும் கண்டி

உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்து வரும் அத்துரலிய ரத்ன தேரருக்கு ஆதவு வழங்கும் நோக்கில் கண்டியில் கடைகளை மூடுமாறு வர்த்தக சங்கத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கண்டியில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்ட உண்ணாவிரத இருக்கும் தேரருக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை அத்துரலிய தேரருக்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கில் ஞானசார தேரரினால் நேற்று வெளியிட்ட காலகெடு இன்று நண்பகல் 12 மணியுடன் நிறைவுக்கு வருகிறது.

இந்த எச்சரிக்கையின் காரணமாக அசாம்பாவிதங்கள் எதுவும் ஏற்படலாம் என அச்ச நிலை உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இன்று நண்பகல் 12 மணிக்கு மன்னர் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் மற்றும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் பதவி விலக்க வேண்டும் என ஞானசார தேரர் தெரிவித்திருந்தார்.

மூன்று பேரையும் பதவி நீக்க ஜனாதிபதி உட்பட அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால் நாடு முழுவதும் திருவிழாவை பார்க்க நேரிடும் என நேற்று ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு ஹிஸ்புல்லாஹ் பதவி இராஜினாமா செய்யும் கடிதத்தை ஜனாதிபதியிடம் அனுப்பி வைத்ததாக தகவல் வெளியாகிய போதிலும் அவர் அதனை நிராகரித்தார்.

அசாத் சாலி மற்றும் ரிஷாட் பதியூதின் அமைச்சர் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு இதுவரையில் எவ்வித அறிவிப்புகளும் வெளியாகாத நிலையில் ஞானசார தேரர் ஜனாதிபதிக்கு வழங்கிய காலக்கெடுவுக்கு இன்னும் சில மணித்தியாலங்களே உள்ளன.

இதேவேளை கண்டி நகரை மையப்படுத்திய பொலிஸார் மற்றும் அதிரடி படையினர் தீவிர பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபவதற்கு தயாராகி வருகின்றனர்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment