அமைச்சர் ராஜித, உலக சுகாதார நிறுவனத்தின் உப தலைவராக 2 ஆவது தடவையாகவும் தெரிவு

சுகாதார போசனைகள் மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு உலக சுகாதார நிறுவனம் இரண்டாவது முறையாகவும் அதன் உப தலைவர் பதவியை வழங்கியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் உள்ள 194 உறுப்பு நாடுகளைக் கொண்ட இந்த உலக சுகாதார அமைப்பின் நிறைவேற்று உறுப்பினர்கள் 35 பேரைக் கொண்ட சபையில் அமைச்சர் இவ்வாறு உப தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இந்த பதவிக்கு நியமிக்கப்பட்டதன் பின்னர் கட்டார் விமான சேவைக்குச் சொந்தமான கியு.ஆர். 668 ஆம் இலக்க விமானத்தில் நேற்று கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்துள்ளார்.
நாட்டை வந்தடைந்த அமைச்சருக்கு களுத்தறை மாவட்ட பிரதான மகாநாயக்கர்களினால் ஆசீர்வாதம் வழங்கப்பட்டதுடன், அமோக வரவேற்பும் அளிக்கப்பட்டுள்ளது.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment