இந்திய வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அமெரிக்க அரசின் வெளியுறவு துறை மந்திரியான மைக் பாம்பியோ ஜூன் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இந்தியாவுக்கு வருகை தரும் மைக் பாம்பியோ, இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். அப்போது இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் ஆலோசனை நடத்தப்ப்படும் என தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment