இலங்கைக்கு 335 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் லண்டனில் இன்று நடைபெற்று வரும் 20-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவுடன், இலங்கை அணி விளையாடி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் கருணரத்னே பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.
இப்போட்டியில் முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 334 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக ஆரோன் பின்ச் 153 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 73 ரன்களும் எடுத்தனர். இலங்கை அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய உதானா, டி சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து 335 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இலங்கை அணி களமிறங்க உள்ளது.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment