காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளினால் இன்று காலை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்காகவும், தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்க வேண்டியும், சுதந்திரமான வாழ்வு பெறவேண்டியும் மஹாயாக வேள்வி மற்றும் ஆன்மீக பிரார்த்தனை இடம்பெற்றது.
வவுனியா புகையிரத நிலைய வீதியிலுள்ள முதிரைத் தோட்டம் தேடி வந்த பிள்ளையார் ஆலயத்தில் சிவஸ்ரீ முத்து ஜெயந்திநாதக்குருக்கள் தலைமையில் இந்த வேள்வி இடம்பெற்றது.
இதில் அருளுரையை கொழும்பு, ஆன்மீக அருள் ஜோதி சர்வதேச இந்து குரு பீடாதிபதி ஸ்கந்தசாபசிவ சரவணபவ ஜயப்பதாசக் குருக்கள் ஆற்றியதுடன் அந்தணர்களும் சிவாச்சாரியார்களும் கலந்து கொண்டனர்.
பின்னர் ஆலயத்திலிருந்து ஊர்வலமாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தமது போராட்ட இடத்தைசென்றடைந்தனர்.
0 comments:
Post a Comment