”போதையற்ற தேசம்” வவுனியாவில் நிகழ்வு

போதையற்ற தேசம் எனும்  நிகழ்வு வவுனியா குருமன்காட்டு சந்தியில் இன்று காலை இடம்பெற்றது.

 கடந்த ஒரு வாரகாலமாக போதைக்கு எதிரான நிகழ்வுகள் இடம்பெற்று வரும் நிலையிலேயே இந் நிகழ்வும் இடம்பெற்றிருந்தது. இதனை வட மாகாண சமூக சேவைகள் திணைக்களமும் வவுனியா மாவட்ட செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது.

போதைக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட பலூன்களும் இதன்போது பறக்கவிடப்பட்டிருந்தது.

போதைக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட ஸ்டிக்கர்கள் வாகனங்களில் ஒட்டப்பட்டது. போதைக்கு எதிரான வாசகங்கள் எழுப்பட்ட பதாகைகளை தாங்கிவாறு கவனவீர்ப்பு ஊர்வலமும் இடம்பெற்றது.

இதில், வவுனியா மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ். ஸ்ரீனிவாசன் ,வவுனியா மாவட்டச் செயலர்  ஐ. எம். கனீபா, வவுனியா முஸ்லீம் மகாவித்தியாலய மாணவர்கள், செட்டிகுளம் பிரதேச செயலர், பாடசாலை அதிபர்கள் , முதியோர் சங்கப் பிரதிநிதிகள், தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பினர், வெளிச்சம் அறக்கட்டளை நிர்வாகிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment