மன்னார் சதொச மனித புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்களின் காலப்பகுதி தொடர்பிலான அறிக்கை, தாயார் செய்வதற்கான ஆய்வு பொருள்கள் மற்றும் மண் போன்றவை தெரிவு செய்யும் நடவடிக்கை நேற்றும் இன்றும் இடம் பெற்றது.
கடந்த மார்ச் மாதம் 22 திகதி இடம் பெற்ற கூட்டத்தில் களனி பல்கழைகலக பேராசிரியர் ராஜ் சோம தேவ்விடம் அறிக்கை ஒன்று கோரப்பட்டிருந்தது. இதற்கமையவே தடையபொருள்கள் சேகரிக்கப்பட்டன.
பேராசிரியர் ராஜ் சோம தேவ் மன்னார் நீதவான் நீதி மன்றில் கொண்டுவந்த நகர்தல் பிரேரனையின் கீழ் ஆய்வு பணிகளுக்கு தேவையான தடைய பொருட்கள் நேற்று காலை தொடக்கம் மன்னார் நீதாவன் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் தெரிவு செய்யப்பட்டது
மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த அனைத்து மனித எச்சங்களும் 20 பெட்டிகளுக்கு மேல் உடைக்கப்பட்டு அதிலிருந்து மனித எச்ச மாதிரிகளும் அதே நேரத்தில் தடையபொருள்களான மோதிரம், சுங்கான் மற்றும் மணல் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது
குறித்த மாதிரிகள் மன்னார் பொலிஸாரால் களனி பல்கழைகழத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதுடன் ஒரு மாத காலப்பகுதியில் அறிக்கை முடிவுகளுடன் எனைய மாதிரிகளுக்கான ஆய்வு முடிவுகளையும் உள்ளடக்கி மன்னார் மனித புதைகுழி தொடர்பான இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
0 comments:
Post a Comment