கவனிப்பாரற்ற நிலையில் சுற்றுச்சூழல் தினத்தில் நடப்பட்ட மரங்கள்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் நடப்பட்டு கூடு கட்டப்பட்ட மரங்கள் கவனிப்பாரற்றுக் கிடப்பதாக சமூக ஆர்வலர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.


வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் நேற்றைய தினம் முல்லைத்தீவு-மாங்குளம் ஏ9 வீதி 226 கிலோமீட்டர் பகுதியில் ஆயிரம் மரக்கன்றுகள் நடுவதற்காக வேலைத்திட்டங்கள் ஆரம்பித்துவைக்கப்பட்டது.


பல்வேறு திணைக்களங்களும் உள்ளடக்கப்பட்டு இந்த வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு இந்த மரநடுகை திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

குறிப்பிட்ட அளவு மரக்கன்றுகள் நடப்பட்டு அதற்கான கூடுகளும்  நேற்றைய தினம்  அடைக்கப்பட்டிருந்தது. நேற்று நடப்பட்டு கூடு அடைக்கப்பட்ட இடங்களில் நேற்று மாலை பல கூடுகள் உடைந்து விழுந்து கிடந்தன.


சில மரங்கள் இல்லாது போய் வெறும் கூடுகள் இருப்பதையும் அவதானிக்க கூடியதாக இருக்கிறது. பல இலட்சம் ரூபாய்களை செலவு செய்து மேற்கொள்ளப்படுகின்ற இவ்வாறான திட்டங்கள் பயனளிக்காது போகும் அளவுக்கு கவனிப்பாரற்று விடப்படுவதற்கு யார் பொறுப்பு எனக் கேள்வி எழுப்புகின்றனர் ஆர்வலர்கள்.
Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment