கள்ளப்பாடு அ.த.க பாடசாலை விளையாட்டரங்கிற்கு அடிக்கல்

முல்லைத்தீவு - கள்ளப்பாடு, அ.த.க பாடசாலையில் விளையாட்டரங்கிற்கு நேற்றையதினம் அடிக்கல் நடப்பட்டது.

பாடசாலையின் முதல்வர் திரு. கருணாகரன்  தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்  கலந்துகொண்டு  அடிக்கல்லை நட்டு வைத்தார்.

தமிழ்தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட நடாளுமன்ற உறுப்பினர்களான. சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா  5 இலட்சம் ரூபாவும் , சாள்ஸ் நிர்மலநாதன் 5 இலட்சம் ரூபாவும்  தமது  விசேட நிதி ஒதுக்கீட்டிலிருந்து,  விளையாட்டரங்கு அமைப்பதற்கு நிதியுதவிகளை வழங்கியுள்ளனர்.

இதில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், பாடசாலை  அபிவிருத்திச்சங்கச் செயலர் திரு.வி.பகீரதன், மற்றும் பாடசாலை  ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment