சமோசா விற்கச் சொன்ன மோடி - வம்பில் மாட்டிய கடைக்காரர்

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் சமோசா கடைக்காரருக்கு வணிக வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் அவர் பிரதமர் மோடியை கைக்காட்டுகிறார்.
உத்தரபிரதேசம் மாநிலத்தின் அலிகார் பகுதியில் உள்ளது ‘முகேஷ் கச்சோரி பன்டர்’. கச்சோரி, சமோசாஆகிய தின்பண்டங்களை சுடச்சுட தயாரித்து விற்கும் இந்த கடைக்காரர் ஆண்டொன்றுக்கு சுமார் அறுபது லட்சம் ரூபாய் வரை சம்பாதிப்பதாக வணிக வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதைதொடர்ந்து, சீமா திரையரங்கின் அருகே இருக்கும் அந்த கடையில் கடந்த 20-ம் தேதி வணிக வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் அந்த கடை பதிவு செய்யப்படாததை கண்டுபிடித்த அதிகாரிகள் கடையின் உரிமையாளர் முகேஷ் இவ்வளவு காலமாக எந்த வரியும் செலுத்தாமல் பல லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதித்துள்ளதாக மதிப்பிட்டனர்.
இதைதொடர்ந்து, வணிகவரித்துறையினர் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதுதொடர்பான செய்திகள் ஊடகங்களில் வெளியான பின்னர், அதிகாரிகள் தன்னை மிரட்டுவதாக முகேஷ் குற்றம்சாட்டியுள்ளார்.நாங்கள் சாதாரணமானவர்கள். சமோசா விற்று பிழைத்து வருகிறோம். ஒரு நாளைக்கு 2 அல்லது 3 ஆயிரம் வரை வியாபாரம் நடக்கும். 40 லட்சம் ரூபாய் வரை வரவு-செலவு நடத்தும் கடை உரிமையாளர்கள் ஜி.எஸ்.டி.வரி செலுத்த வேண்டியதில்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.என்னுடைய வருமானம் இதில் பாதிகூட இருக்காது. எனவே, நான் இதுவரை எந்த வரியும் செலுத்தியது கிடையாது என்று பிரதமர் மோடியை கைக்காட்டுகிறார்.கடந்த ஆண்டில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருவது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், ‘சுயதொழிலாக பக்கோடா வியாபாரம் செய்து தினந்தோறும் 200 ரூபாய் சம்பாதிப்பவரை வேலையில்லாதவராக எப்படி கணக்கிட முடியும்? என குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment