கடற்படையினரின் திடீர் சோதனை நடவடிக்கையின் போது ஒருதொகை
பீடி இலைகள் கொண்ட பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
வட மத்திய கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் முன்னெடுத்த இந்த நடவடிக்கையின் போது 45 பொதிகள் கொண்ட 939.2 கிலோ கிராம் பீடி இலைகள் இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
மன்னார் நடுக்குடா கடற்கரை பகுதியில் கடற்கரை பகுதியில் கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட பீடி இலைகள் யாழ்.சுங்கத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
2019 ஆம் ஆண்டில் இது வரை 16 ஆயிரத்து 500 கிலோ பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
0 comments:
Post a Comment