மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பிலான பரிந்துரைகள் உள்ளடங்கிய அறிக்கை இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் முன்வைக்கப்பட உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் ஆஷூ மாரசிங்க தெரிவித்துள்ளார்.
குறித்த பல்கலைகழகம் தொடர்பான அறிக்கை கடந்த வௌ்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டிருந்தது.
அதேவேளை குறித்த அறிக்கையின் நகல் ஒன்று நேற்று (24) சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த பல்கலைகழகத்தை அவசரகால சட்டத்தின் கீழ் அரசுடமையாக்குவதில் எவ்வித தடையும் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஆஷூ மாரசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment