ஜனாதிபதி தேர்தல் – போட்டியிலிருந்து மைத்திரி விலகல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,  எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகிக்கொள்ளக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பெண்கள் முன்னணி கூட்டத்தில் கடந்த புதன்கிழமை உரையாற்றிய மைத்திரி, கட்சிக்கும் கட்சியின் ஆதரவாளர்களுக்கும் அநீதி ஏற்படாத வகையில் ஜனாதிபதி தேர்தல் விடயத்தில் கௌரவமான முடிவு எடுக்கப்படும் என்று கூறியிருந்தார்.
அத்துடன் மும்முனைப் போட்டிக்கு வாய்ப்பில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையிலேயே, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து மைத்திரிபால சிறிசேன விலகிக்கொள்ளக்கூடும் என கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அத்தோடு, எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐ.தே.க. முன்னிறுத்தப்போகும் வேட்பாளருக்கும், மஹிந்த தரப்பு வேட்பாளருக்கும் இடையில் நேரடிப் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment