தரையிறங்கிய விமானம் கட்டடத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் விமானி உள்பட இருவர் உடல் கருகி உயிர் இழந்துள்ளனர்.
ரஷியாவின் பிரியாத்தியா பிராந்தியத்தில் உள்ள நில்நியான்கார்ஸ்க் நகர விமான நிலையத்திலிருந்து பிராந்திய தலைநகர் யூலன்-ஊடேவுக்கு பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.
நேற்று அதிகாலை புறப்பட்ட குறித்த விமானத்தில் 43 பயணிகள் உள்பட 48 பேர் இருந்தனர்.
விமானம் பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களில் திடீரென ஒரு என்ஜின் செயலிழந்தது. இதையடுத்து உடனடியாக விமானம் நில்நியான்கார்ஸ்க் விமான நிலையத்துக்கு திருப்பப்பட்டது. அங்கு விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
அப்போது ஓடுபாதையிலிருந்து சறுக்கி 100 மீட்டர் தூரத்துக்கு சென்ற விமானம், அங்குள்ள கழிவு நீர் சுத்திகரிப்பு கட்டடத்தின் மீது மோதி தீப்பிடித்தது.
விமான நிலையத்திலிருந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டுத் தீயை அணைத்தனர்.
எனினும் இந்தக் கோர விபத்தில் விமானி மற்றும் தொழில்நுட்ப வல்லுனர் என இருவர் உடல் கருகி உயிரிழந்தனர். பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
0 comments:
Post a Comment