வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகளுக்காகப் போடப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு நேற்றிலிருந்து விலக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தங்கியிருந்த சுமார் ஆயிரத்து, 600 அகதிகள் அண்மையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் பாதுகாப்புக்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் வவுனியா கூட்டுறவுக் கல்லூரியில் கடந்த 10 ஆண்டுகளாக முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வளிக்கும் புனர்வாழ்வு நிலையத்தின் கட்டடமொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இவர்கள் தங்கவைக்கப்பட்ட கட்டடத்தை சூழவும் குறித்த பகுதியிலும் இராணுவம் அதிகளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நேற்றைய தினத்திலிருந்து பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்த இராணுவத்தினர் விலக்கப்பட்டதுடன் முழுமையாக பொலிஸாரின் பாதுகாப்பினுள் அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அகதிகளுக்கான வசதிகளை ஐக்கிய நாடுகளுக்கான அகதிகள் உயர்ஸ்தானிகராலயம் மேற்கொண்டு வருகின்றமை குறிப்படத்தக்கது.
0 comments:
Post a Comment