பிரதமர் மோடி - ஜனாதிபதி டிரம்ப் இடையில் பேச்சு

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சவூதி பட்டத்து இளவரசர் சல்மான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி இன்று ஜப்பான் நகரான ஒசாகாவில் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். 

ஜி 20 நாடுகளின் இரு நாள் மாநாடு ஜப்பான் நகரான ஒசாகாவில் இன்று ஆரம்பிக்கவுள்ளது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பான் சென்ற பிரதமர் மோடி நேற்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயை சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

நாட்டைவிட்டு தப்பி ஓடும் பொருளாதாரக் குற்றவாளிகள் குறித்த பிரச்சனையை பிரதமர் மோடி முந்தைய ஜி-20 மாநாடுகளில் எழுப்பியதை சுட்டிக்காட்டிய ஷின்சோ அபே, ஊழல்தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இப்பிரச்சனையை கையாள வேண்டும் என்றார்.

மும்பை-அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம் குறித்தும், இரு நாடுகளின் நட்பின் அடையாளமாக வாரணாசியில் கட்டப்பட உள்ள மாநாட்டு அரங்கம் திட்டம் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர். உலக வர்த்தகம், புவி வெப்பமயமாதல் மற்றும் பருவநிலை மாற்றம் குறித்தும் மோடியும் அபேவும் ஆலோசனை நடத்தினர்.

இன்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ரஷ்ய ஜனாதிபதி புதின் , பிரான்ஸ் அதிபர் இமானுவல் மாக்ரான் உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.

ஜனாதிபதி டிரம்ப்புடன் 40 நிமிடப் பேச்சு நடத்தப்படவுள்ளது. இதில் 20 நிமிடங்களுக்கு இந்தியா-அமெரிக்கா தொடர்பான பேச்சுகளும் அடுத்த 20 நிமிடங்களுக்கு இந்தியா-அமெரிக்கா-ஜப்பான் முத்தரப்பு பேச்சுவார்த்தைகளும் நடைபெறவுள்ளன.

பேச்சுவார்த்தை குறித்து டிரம்ப் தமது டிவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியா நீண்ட காலமாகவே அமெரிக்கப் பொருட்களுக்கு கடுமையான வரி விதித்து வருகிறது என்றும் இப்பிரச்சினை குறித்து மோடியிடம் விவாதிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அண்மையில் அமெரிக்காவின் 28 பொருட்களுக்கு இந்தியாவில் மேலும் வரிகள் உயர்த்தப்பட்டிருப்பதை ஏற்க முடியாது என்றும் டிரம்ப் குறிப்பிட்ள்ளார். இந்தியாவை சாடியது போலவே ஜப்பானையும் டிரம்ப் சாடியுள்ளார்.

தற்போதுள்ள ஒப்பந்தங்களின் படி அமெரிக்கா மீது தாக்குதல் தொடுக்கப்பட்டால், அதனை ஜப்பானியர்கள் சோனி தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

டிரம்பின் பதிவுக்கு பதில் அளித்த இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள், மற்ற வளரும் நாடுகளில் உள்ளது போல் வரிகள் இந்தியாவில் இல்லை என்று சுட்டிக் காட்டியுள்ளனர்.

இந்தியா-ரஷ்யா இடையிலான எஸ் 400 ஏவுகணை தொகுப்பை வாங்குவதற்கும் அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தப் பிரச்சினையும் இன்றைய சந்திப்பில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment