விவசாய பணிப்பாளர் தாக்கப்பட்டமைக்கு நீதி கோரி கவனயீர்ப்பு

வவுனியா பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அலுவலக உத்தியோகத்தர்கள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வவுனியா மாவட்டப் பிரதி மாகாண விவசாய பணிப்பாளர்  யாழ்ப்பாணத்தில் மற்றுமொரு அதிகாரியால் தாக்கப்பட்டதை கண்டித்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா உள்வட்ட வீதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் மாகாண விவசாய பணிப்பாளர் தாக்கப்பட்டமையை கண்டிக்கின்றோம், மாகாண விவசாயப் பணிப்பாளரே நீதி வழங்குங்கள் என்ற கோசங்கள் எழுதப்பட்ட பதாகைகளைத் தாங்கியவாறு கவனவீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதன்போது கருத்து தெரிவித்த உத்தியோகத்தர்கள், நேற்று  யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கணக்காய்வு கூட்டத்தில் கலந்துகொண்டதன் பின்னர் இடம்பெற்ற அசம்பாவிதம் ஒன்றில் எமது விவசாய பணிப்பாளர் காயமடைந்து யாழ்.வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இதற்கு நீதி பெற்றுத்தரவேண்டும் எனத் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கவனவீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்த வவுனியா மாவட்ட செயலகத்திற்கு சென்று  மாவட்டச் செயலரிடம் குறித்த சம்பவத்திற்கு நீதி கோரி நடவடிக்கை எடுக்கவேண்டும் என மகஜர் ஒன்றையும் கையளித்தனர்.Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment