அப்துல் ராசிக்கிற்கும் பாராளுமன்றத் தெரிவுக் குழு அழைப்பு

ஏப்ரல்21 தாக்குதல் தொடர்பில் சிலோன் தௌஹீத் ஜமாத்தின் செயலாளர் அப்துல் ராசிக், பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் ஆஜராகுமாறு அழைக்கப்பட்டுள்ளார்.
இன்று பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் பிற்பகல் 2 மணிக்கு இந்த தெரிவுக் குழு கூடுகிறது. அவருக்கு மேலதிமாக காத்தான்குடி பிரதேசத்தில் உள்ள பல்வேறு முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளும் சாட்சி வழங்க அழைக்கப்பட்டுள்ளனர்.
இதுவரையில், பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரால் சாந்த கோட்டேகொ, தேசிய புலனாய்வு பிரதானி பதவியிலிருந்த அண்மையில் விலகிய ஓய்வு பெற்ற சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சிசிர மெண்டிஸ், பயங்கரவாத தடுப்பு பிரிவின் முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வா, கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜெயசுந்தர, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்ணாண்டோ, மேல் மாகாண முன்னாள் ஆளுனர் அசாத் சாலி, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுனர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, அகில இலங்கை ஜமியத்துல் உலமா சபையின் தலைவர் மௌலவி எம்.ஐ.எம். ரிஷ்வி, கத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி மற்றும் முன்னாள் பொறுப்பதிகாரி ஆகியோரும், முஸ்லிம் அமைப்புகளின் உறுப்பினர்கள், சூஃபி முஸ்லிம் தலைவர் ஆகியோரும் சாட்சிப் பதிவை மேற்கொண்டிருந்தனர்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment