ஜனாதிபதித் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியானது!

ஜனாதிபதித் தேர்தல் குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நேற்று வெளியிட்டுள்ளார்.
அந்தவகையில், வரும் நவம்பர் 9 இலிருந்து டிசம்பர் 9 இற்குள் ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, டிசம்பர் 7ஆம் திகதி தேர்தல் நடத்தப்படவேண்டும் என தேர்தல் ஆணையாளர் தன்னிடம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்த வருட இறுதியுடன் ஜனாதிபதி ஆயுட்காலம் முடிவடைகின்ற நிலையில் மீண்டும் ஒரு தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்வதற்காக இந்தியாவுக்கு சென்ற ஜனாதிபதி, இன்று பிரதமர் மோடியுடன் சந்திப்பினை மேற்கொண்டிருந்தார். இதையடுத்து இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே ஜனாதிபதி இந்தவிடயத்தை தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி நாட்டில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத் தாக்குதல்களை அடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமை தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அவர் இந்த அறிவிப்பினை விடுத்துள்ளார்.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment