பேரினவாத இயக்கங்களுக்கு எதிராக தீர்க்கமான முடிவொன்றை எடுக்காவிடின் அனைத்து சிறுபான்மை அரசியல்வாதிகளும் பதவியை இழக்க நேரிடுமென தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் அமைச்சர்களின் இராஜினாமா குறித்து நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே மனோ கணேசன் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“பேரினவாதம் பேசி, போராட்டம் நடத்தி, முஸ்லிம் அமைச்சர்களை ராஜினாமா செய்யும் நிலைமைக்கு உள்ளாக்கிய பௌத்த துறவிகள், கௌதம புத்தரை அவமானப்படுத்தி உள்ளார்கள்.
“இன்று முஸ்லிம் அமைச்சர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலைமையே நாளை தமிழ்- சிங்கள கத்தோலிக்க அரசியல்வாதிகளுக்கும் ஏற்பட போகின்றது.
அதனைத் தொடர்ந்து தாம் விரும்பாத சிங்கள அரசியல்வாதிகளுக்கு எதிராகவும் மக்களை தூண்டி விட்டு அவர்களை பதவி விலகுமாறு குரல் எழுப்புவார்கள்.
ஆகையால் பேரினவாதிகளுக்கு ஆதரவாக ஒருபோதும் செயற்பட நினைக்க கூடாது. அது மோசமான முன்னுதாரணமாக ஆகிவிடும்.
அத்துடன் பேரினவாத இயக்கங்களுக்கு அரசியல் ரீதியாக முடிவு காணப்பட வேண்டும். இல்லாவிடின் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகளும் பதவியை இராஜினாமா செய்யவேண்டிய நிலைமை ஏற்படும்” என மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment