அடையாளம் காணப்பட்டார் சியோன் தேவாலய தற்கொலைதாரி

மரபணு பரிசோதனையின் அடிப்படையில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தின் தற்கொலை குண்டுதாக்குதலில் சிதறுண்ட தலை மற்றும் உடற்பாகங்கள் தற்கொலைதாரியான முகமது ஆசாத்தினுடையது என்று கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த உடற்பாகங்களின் மாதிரிகள் தற்கொலைதாரியான முகமது நாசர் முகமது ஆசாத் என்பவரின்  தாயாரின் மரபணு மாதிரிகளுடன் ஒப்பிட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
இதனையடுத்து தற்கொலைதாரி அடையாளம் காணப்பட்டதையடுத்து அந்த உடலை அரச செலவில் அடக்கம் செய்யுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை கட்டளையிட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 21 ம் திகதி இடம்பெற்ற தற்கொலை குண்டுதாக்குதலில் அயல் வீட்டின் கூரையின் மேலிருந்து மீட்கப்பட்ட தலை மற்றும் உடலில் இருந்து வேறாக்கப்பட்ட இரண்டு கால்களுடனான  உடல் பாகங்கள் தேவாலயத்தின் அயல் பகுதிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்டன.
மேலும் உயிரிழந்தவர்களின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
எனினும், அடையாளம் காணாத நிலையில் இருந்த தலை மற்றும் உடற்பாகங்கள் தொடர்ந்தும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட காத்தான்குடியைச் சேர்ந்த தற்கொலைதாரியான 34 வயதான முகமது நாசார் முகமது ஆசாத் என தெரியவந்தது
இதனையடுத்து அவரின்  தாயாரான 54 வயதுடைய  அலியார் லதீபர் பிவி  கைது செய்யப்பட்டதுடன் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தின் முன்னிலையில்  குறித்த சடலத்தை தனது மகன் என அடையாளம் காட்டினார்.
இதனால் உயிரிழந்தவருடைய தாயாரின் மாதிரி இரத்தத்தை பெற்று, மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டிருந்தார்
அரச இரசானவியல் பகுப்பாய்வு திணைக்களம்,  இந்த உடற்கூறுகள் ஆசாத்தினுடைய உடற்கூறுகள் என நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது.
இந்த வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக் கொண்டபோது, சி.ஜ.டி.யினர் ஆஜராகி இரசானவியல் பகுப்பாய்வு திணைக்களம் அனுப்பிய மரபணு பரிசோதனை அறிக்கைளை நீதவானிடம் ஒப்படைத்தனர்
இந்த உடற்கூறின் தலையை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி சடலத்தை அரச செலவில் அடக்கம் செய்யுமாறு  அரசாங்க அதிபருக்கு நீதவான் கட்டளை பிறப்பித்துள்ளார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment