நடிகர் சங்க கட்டட பணியை தடுக்க முயற்சி


தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு ஜூன் 23ம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில் பாண்டவர் அணி சார்பில் விஷால், பூச்சி முருகன், குஷ்பு, கோவை சரளா, லதா, மனோபாலா உள்ளிட்ட பலர் வேட்புமனு தாக்கல் செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் விஷால் பேசியதாவது : 

கட்டட பணிகளை தடுக்க சிலர் முயற்சிக்கிறார்கள், அதை நாங்கள் நடக்க விட மாட்டோம். இன்னும் 4 அல்லது 6 மாத காலத்தில் கட்டட பணிகள் முழுமையாக முடிவடைந்து கட்டடம் திறக்கப்படும். இந்த பணிகள் நிச்சயம் நிறைவேறும். கடந்த முறை தேர்தலில் சொன்ன எல்லா வாக்குறுதிகளையும் நிறைவேற்றி உள்ளோம். நடிகர்களின் ஓய்வு ஊதியம் அதிகரித்து வழங்கப்படும். 

மிரட்டல்கள், எனக்கு புதிதல்ல. அடுக்குமாடி குடியிருப்பு சங்க தேர்தலில் நின்றாலும், இப்போது மிரட்டல் வருகிறது. தேர்தல் நேரத்தில், இரண்டு ஓட்டுகளை பெறுவதற்காக, மற்றவர்களை கொச்சைப்படுத்த விரும்பவில்லை. 

தேர்தலை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. யார் வேண்டும் என்றால் என்ன வேண்டுமானாலும் சொல்லலாம். சட்டப்படி தேர்தல் நடந்தே தீரும். நடிகர் சங்கம் அரசியலுக்கு அப்பாற்றபட்டது. இங்கு இருப்பவர்கள் யாரும் கட்சி சார்ந்து இல்லை. நடிகர் சங்கம் கட்டட திறப்பு விழா மற்றும் மரியாதை நிமித்தமாக முதல்வர் மற்றும் துணை முதல்வரை சந்திக்க உள்ளோம் என்றார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment