கோமாவிலேயே இருங்க நேசமணி: வடிவேலுவை விளாசிய நவீன்

பேட்டி ஒன்றில் இயக்குநர்கள் ஷங்கர், சிம்புதேவனை விளாசிய வடிவேலுவை கண்டித்துள்ளார் இயக்குநர் நவீன்.

நேசமணி ஹேஷ்டேக் உலக அளவில் டிரெண்டானதை அடுத்து வடிவேலு அளித்த பேட்டியில் அவர் இயக்குநர்கள் ஷங்கர், சிம்புதேவனை கடுமையாக விமர்சித்திருந்தார். இதை பார்த்த இயக்குநர் நவீன் கோபம் அடைந்து ட்வீட் செய்துள்ளார்.

வடிவேலு நல்ல கலைஞன் தான், இருந்தாலும் இந்த அளவுக்கு அகந்தை கூடாது என்கிறார் நவீன். 

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
அண்ணன் வடிவேலு அவர்களின் நேர்காணல் பார்த்தேன். என் இயக்குனர் @chimbu_deven சாரை அவன் இவன் என்ற ஏகவசனங்களில் பேசியிருந்தார்.

சின்னபையன், சின்ன டைரக்டர், பெருசா வேல தெரியாத டைரக்டர் என்றெல்லாம் பிதற்றியிருந்தார், இவரை ஹீரோவாக வைத்து ஹிட் கொடுத்த ஒரே டைரக்டரை ஏதோ இவரால்தான் புலிகேசி உருவானது போல் உடான்ஸ் விடுகிறார். 

நான் ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்து வியந்த நடிகன் நீங்கள். நீங்கள் ஜீனியஸ்தான். ஆனால் நடிகனாக மட்டுமே. உங்களால் காமெடி ட்ராக் ரெடி பண்ண முடியுமே தவிற ஸ்கிர்ப்டை அல்ல. இவ்வளவு அகந்தை கூடாது.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment