முல்லைத்தீவு, செம்மலைப்பகுதியில் ”கிராமிய மக்கள் சக்தி” வேலைத்திட்டத்தின் கீழ் இரண்டு இலட்சம் ரூபா செலவில் மீள் நிர்மாணம் செய்யப்பட்ட பால் உற்பத்தி பொருள்கள் சந்தைப்படுத்தல் கட்டடம் அமைக்கப்பட்டு நாட்டுக்காக ஒன்றிணைவோம் வேலைத்திட்டத்தின் கீழ் இன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான், ஜனாதிபதி செயலக அதிகாரிகள், கரைத்துறைப்பற்று பிரதேச செயலர் உமாமகள் மணிவண்னன், ஜனாதிபதி செயலக அதிகரிகள் மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சி முல்லைத்தீவு மாவடட அமைப்பாளரும் புதுக்குடியிருப்பு பிரதேச சபை உறுப்பினருமான ச.சத்தியசுதர்சன் மற்றும் கிராம மக்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது குறித்த நிலையம் திறந்து வைக்கப்பட்டதன் நினைவாக குறித்த வளாகத்தில் மரக்கன்றுகளும் நடப்பட்டது.
0 comments:
Post a Comment