கிளிநொச்சியில் கிராமங்கள் கையளிப்பு

கிளிநொச்சி தம்பகாமம் வண்ணாங்கேணி வடக்குப் பகுதியில் அமைக்கப்பட்ட மாதிரி கிராமங்கள் இன்று பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.


தேசிய வீடமைப்பு அதிகார சபையின் செமட்ட செவன வேலைதிட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட ஆராதி நகர் , சஞ்சீவி நகர் ஆகிய கிராமங்களை அமைச்சர் சஜித் பிரேமதாச திறந்து வைத்தார்.


இதில், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் , கிளிநொச்சி மேலதிக செயலர், பிரதேச செயலர், வீடமைப்பு அதிகார சபை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


கிளிநொச்சி மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 100 பேருக்கு மூக்கு கண்ணாடிகளும், 50 பேருக்கு தொழில் உபகரணங்களும், 350 பேருக்கு கடன் திட்டத்தின் கீழான காசோலைகளும் நிகழ்வின்போது கையளிக்கப்பட்டன.
Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment