குப்பைக் கழிவுகளுக்குள் மீட்கப்பட்ட மனித உடல்கள்

குப்பைக் கழிவுகளைச் சேகரிக்கும்போது அதற்குள்ளிருந்து நான்கு மனித உடல்களும் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று நேபாளத்தில்  நடந்துள்ளது.

எவரஸ்ட் சிகரத்தில், மலையேற்ற பயிற்சியாளர்கள் விட்டுசென்ற 11 டன் குப்பைக் கழிவுகள் சேகரிக்கப்பட்ட நிலையிலேயே மனித உடல்களும் கிடைத்தன எனத் தெரிவிக்கப்படுகிறது.

உலகின் மிக உயரிய சிகரமான எவரஸ்டில் மலையேற்ற பயிற்சியில் ஈடுபடுவோர் சிகரத்தில் அதிக குப்பைகள் தேங்கியிருப்பதாக முறைப்பாடு செய்ததையடுத்து  நேபாள அரசு சிகரத்தில் தூய்மை பணி மேற்கொண்டது.

அதன்படி கடந்த 45 நாள்கள் நடந்த தூய்மை பணி நேற்று நிறைவடைந்தது. இதில் மலைச்சரிவுகளிலிருந்து 4 உடல்கள், பயிற்சியாளர்கள் பயன்படுத்தி வீசிய ஒக்ஸிஜன் உருளைகள், கிழிந்த கூடாரங்கள், உடைந்த ஏணிகள், பிளாஸ்டிக் கழிவுகள் என 11 டன் குப்பைகளை ஆர்வலர்கள் மூட்டைகளில் சேகரித்தனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment