யாழில் விபத்து – பாடசாலை மாணவர்கள் காயம்

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரிக்கு முன்பாக இடம்பெற்ற வீதி விபத்தில் 5 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்த மாணவர்கள் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று   காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கொட்டடி பகுதியிலிருந்து பயணித்த முச்சக்கரவண்டி, வேகக் கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசையில் வந்த மாணவர்களை மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

மேலும் விபத்தினை ஏற்படுத்திய முச்சக்கரவண்டி சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாரிடம் குறித்த முச்சக்கரவண்டிச் சாரதியைக் கைது செய்யுமாறு கோரி பொதுமக்கள் முரண்பட்டதுடன், பொலிஸார் சந்தேகநபரை கைது செய்வதில் இழுத்தடிப்புச் செய்வதாக குற்றஞ்சாட்டினர்.

இதனால் ஒரு மணித்தியாலம் குறித்த பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பிக்கபட்டதுடன், பொதுமக்கள் வீதியில் இறங்கி  பொலிஸாருடன் முரண்பட்டனர்.

இதனையடுத்து விபத்தினை ஏற்படுத்திய முச்சக்கரவண்டிச் சாரதியை சி.சி.ரி.வி கமராவின் உதவியுடன் கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment