முல்லைத்தீவில் மின்குமிழ் வழங்கும் நிகழ்வு

மின்குமிழ் வழங்குதல், மின் விநியோகம் மற்றும் பயன்பாடு தொடர்பான மக்கள் நடமாடும் சேவை இன்றையதினம் மின்சார சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில்  நாட்டிற்காக ஒன்றிணைவோம் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் ஆரம்ப நிகழ்வுகள் இன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்று வருகின்றது.

மாங்குளம் மின் பாவனையாளர் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தெரிவு செய்யப்பட்ட 750 பயனாளிகளுக்கான சக்தி LED மின்குமிழை வழங்கும் நிகழ்வு இன்று இடம்பெற்று வருகின்றது

நீண்ட காலம் பாவிக்கக் கூடிய பாவனைக்  காலம் 10 ஆயிரம் மணித்தியாலங்களுக்கு அதிகமாக இருக்கின்ற சூத்திரிக்கா  மின்குமிழை விடவும் 85 வீதம் மின்சாரத்தை சேமிக்க கூடிய ஊகுடு  மின்குமிழ்களை விடவும் 31 வீதம் மின்சாரத்தை சேமிக்கக் கூடிய இரசாயனங்கள் சேர்க்காதது  என்பதால் சூழலுக்கு உகந்த  இந்த மின்குமிழ்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

இன்று காலை முதல் மாங்குளம் மின் பாவனையாளர் நிலையத்தில் மின் பொறியியலாளர்  R.ரகுலேந்திரா  தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment