பேரப்பிள்ளையால் அடித்தது ஐயாவுக்கு அதிஷ்டம்

பேத்தியின் அதிர்ஷ்ட எண்களை பயன்படுத்திய முதியவர் ஒருவருக்கு லாட்டரியில் 2 ஆயிரத்து 385 கோடி ரூபா  பரிசு விழுந்துள்ளது.

அமெரிக்காவின் வட கரோலினா மாகாணத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற முதியவர் சார்லஸ் டபிள்யூ ஜாக்சன் ஜூனியர் தமது குடும்பத்துடன் வியட்னாமிய உணவகத்துக்கு சென்றுள்ளார். 

அங்கு அவர் தனது பேத்திக்கு வாங்கிய பார்ட்ச்யூன் கூக்கீஸ் ல் இருந்த எண்களின் அடிப்படையில் வழக்கம் போல் லாட்டரி வாங்கினார்.

அதிர்ஷ்ட வசமாக அந்த எண்களுக்கு லாட்டரியில் யோகம் அடித்தது. இந்திய மதிப்பில் 2 ஆயிரத்து 385 கோடியே 50 இலட்ச ரூபாவை பரிசாக வென்றுள்ளார்.

இதேவேளை, ஏற்கனவே கடவுளிடம் வேண்டிக்கொண்ட படி 2 குழந்தைகள் மருத்துவமனைகள் மற்றும் ஒரு ராணுவ வீரர்களுக்கான மருத்துவமனைக்கு தலா 10 லட்சம் டாலர்களை நன்கொடையாக வழங்குவதாகக் கூறியுள்ளார்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment