மர நடுகை மற்றும் விழிபுணர்வு

பேண்தகு வனமுகாமைத்துவத்தின் மூலம் வாயு மாசுபாட்டைக் குறைப்போம் எனும் தொனிப்பொருளில்  மன்னார் மாவட்ட சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் மர நடுகை மற்றும் விழிபுணர்வு நிகழ்வு இன்றையதினம் இடம் பெற்றது

மன்னார்  லூசியா மகா வித்தியாலயத்தில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் மன்னார் பொறுப்பதிகாரி கலாநிதி.திருமதி.ராஜேஸ் கிமலதா தலைமையில்  நிகழ்வு இடம்பெற்றது.

 நிகழ்வின்போது, பேண்தகு வனமுகாமைத்துவத்திற்கு உதவும் வகையில் மரங்கள் பாடசலை வளாகத்தில் நட்டு வைக்கப்பட்டதுடன் மாணவர்கள் ஆசிரியர்களினால் வாயு மாசுபாட்டைக் குறைப்பதற்கான உறுதி மொழியும் எடுத்துக்கொள்ளப்பட்டது.

மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் விருந்தினர்களால் விசேட கருத்தமர்வு இடம் பெற்றதுடன் கடந்த வருடத்தில் சுற்றாடல் சார்ந்து சிறப்பாக செயற்பட்ட மாணவ மாணவிகளுக்கான பதக்கங்கள் சான்றிதழ்கள் மற்றும் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இதில், மன்னார் மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் திரு.S.குணபால்  மன்னார் பிரதேச செயலர் திருமதி.சிவசம்பு கனகாம்பிகை, மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.பிரட்லி மற்றும் மன்னார் மடு வலய சுற்றாடல் முன்னோடி ஆணையாலர்களும் கலந்து சிறப்பித்தனர்.
























Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment