வயதான பெற்றோரை கைவிடும் பிள்ளைகளுக்கு சிறைத்தண்டனை

வயதான பெற்றோரை கவனிக்காமல் கைவிடும் பிள்ளைகளுக்கு சிறைத் தண்டனை வழங்குவதற்கு பீகார் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்தியாவிற்கு பெருமை சேர்த்த கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையானது தற்போது மெல்ல மெல்ல சிதைந்து வருகிறது. திருமணமானவுடன் பெற்றோரை விட்டு விரிந்து தனிக்குடித்தனம் செல்ல விரும்பும் மனப்போக்கு அதிகரித்துள்ளது. சிலர் பெற்றோரின் அடிப்படை தேவைகளை கூட செய்யாமல், அனாதைகளாக தவிக்க விடுகின்றனர்.
இவ்வாறு வயதான பெற்றோரை முறையாக கவனிக்காமல் கைவிடும் மகன்கள் மற்றும் மகள்களுக்கு, சிறைத் தண்டனை வழங்குவதற்கு பீகார் அரசு முடிவு செய்துள்ளது. முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்களிடம் இருந்து புகார்கள் வரப்பெற்றால், பிள்ளைகள் மீது பிணையில் வெளிவர முடியாத சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment