பதற்றநிலையை அதிகரிப்பதில் ஈடுபட்டால் கடுமையான பதிலடி

அமெ­ரிக்­கா­வா­னது வர்த்­தகம் தொடர்பான பதற்­ற­நி­லையை அதிக­ரிப்­பதில் உறு­தி­யாக இருக்­கு­மாயின் கடு­மை­யான பதிலடியை சீனா கொடுக்கும் என சீன வெளிநாட்டு அமைச்சு நேற்று எச்­ச­ரித்­துள்­ளது.
இம் மாதம் இடம்­பெ­ற­வுள்ள ஜி–20 உச்­சி­மா­நாட்டில் உடன்படிக்கை எதுவும் எட்­டப்­ப­டா­த­வி­டத்து சீனா­வி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­படும் பொருட்கள் மீது மேல­திக சுங்க வரிகளை விதிக்க அமெ­ரிக்கா தயா­ரா­க­வுள்­ள­தாக அமெ­ரிக்க ஜனாதி­பதி டொனால்ட் ட்ரம்ப் தெரி­வித்­துள்ள நிலை­யி­லேயே சீன வெளிநாட்டு அமை­ச்சின் மேற்­படி எச்­ச­ரிக்கை வெளியா­கி­யுள்­ளது.
ஒஸாகா நகரில் இடம்­பெறும் அந்த உச்­சி­மா­நாட்டில் சீன ஜனாதிபதி ஸி ஜின்­பிங் கைச் சந்­தித்துப் பேச்­சு­வார்த்தை நடத்தத் தான் தயா­ரா­க­வுள்­ள­தாக ட்ரம்ப் திரும்பத் திரும்ப தெரி­வித்து வருகிறார்.
ஆனால் சீனா­வா­னது அந்த சந்­திப்பு தொடர்பில் உறு­திப்­ப­டுத்­தாது இருந்து வருகிறது.
உல­க­ளா­விய ரீதியில் மிகப் பெரிய பொரு­ளா­தார நாடுகள் பங்கேற்கும் அந்த உச்­சி­மா­நாட்­டை­ய­டுத்து சீனப் பொருட்கள் மீது குறைந்­தது 300 பில்­லியன் அமெ­ரிக்க டொலர் பெறு­ம­தி­யான சுங்க வரியை விதிப்­பதா இல்­லையா என்­பதைத் தீர்­மா­னிக்­க­வுள்­ள­தாக ட்ரம்ப் கடந்த வாரம் தெரி­வித்­தி­ருந்தார்.
இந்­நி­லையில் அவர் நேற்று முன்­தினம் திங்­கட்­கி­ழமை கருத்து வெளியி­டு­கையில்,
ஒஸா­காவில் சீன ஜனா­தி­ப­தி­யுடன் இடம்­பெ­ற ­வுள்ள வர்த்­தக பேச்­சு­வார்த்­தை­க ளின் போது முன்­னேற்றம் எத­னை யும் எட்ட முடி­யா­விட்டால் அந்­நா­ட்டு இறக்­கு­ம­தி­களின் மீது தண்­டிக்கும் வகையில் பிறி­தொரு சுற்று சுங்­க­வ­ரி­களை விதிக்­கப்போவதாக அச்சு­றுத்தல் விடுத்­து­ள்ளார்.
இத­னை­ய­டுத்து சீன வெளிநாட்டு அமை ச்சின் பேச்­சாளர் கெங் ஷுவாங் நேற்று செவ்­வாய்க்­கி­ழமை தெரி­விக்­கையில்இ சீனா வர்த்­தகப் போரில் ஈடு­ப­டு­வதை விரும்ப­வில்லை. ஆனால் வர்த்­தகப் போரொன்றில் ஈடு­ப­டு­வது குறித்து நாம் அஞ்­ச­வில்லை என்று கூறினார்.
சீனா தரா­தர அடிப்­ப­டை­யி­லான பேச்­சு­வார்த்­தை­க­ளுக்கு தனது கதவைத் திறந்து வைத்துள்ளது என அவர் குறிப்பிட்டார்.
எனினும் ஜி–20 உச்சிமாநாட்டில் ட்ரம்புடன் சீன ஜனாதிபதி பேச்சுவார்த்தைகளில் ஈடு படத் தயாராகவுள்ளாரா என்பது குறித்து அவர் விமர்சனம் எதனையும் வெளியிட வில்லை.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment