சுற்றுலா தலமாக மாறிய உலகின் மிக உயர்ந்த அஞ்சலகம்

இந்தியாவில் உள்ள உலகிலேயே மிக உயர்ந்த அஞ்சலலுவத்தை சுற்றுலா பயணிகள் கண்டு களிக்கின்றனர்.
இமாச்சல பிரதேசத்தின் ஹிக்கிம் கிராமம் அதிக மலைகளை கொண்ட, சுற்றுலா பயணிகள் அதிகம் செல்லும் இடமாகும். இப்பகுதியில் 14 ஆயிரத்து 567 அடி உயர மலையின் உச்சியில் அஞ்சலகம் ஒன்று கட்டப்பட்டுள்ளது.
இந்த அஞ்சலகம் தான் உலகிலேயே மிக உயரிய அஞ்சலகம் எனும் பெருமையைக் கொண்டுள்ளது. இந்த அஞ்சலகத்தை காண உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
1983ஆம் ஆண்டு முதல் இயங்கி வரும் இந்த அஞ்சலகத்தில் ரின்சென் செர்ரிங் என்பவர் போஸ்ட் மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இந்த பயணத்தின் நினைவாக அஞ்சலகத்தில் விற்கப்படும் முத்திரைகளை சுற்றுலா பயணிகள் வாங்கிச் செல்கின்றனர்.
மேலும் இயற்கையை ரசிக்க நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், இந்த அஞ்சலகம் மிகுந்த இயற்கை அழகுடன் மேலோங்கி காணப்படுகின்றது எனவும் இங்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment