தமிழரசுக்கட்சி அலுவலகத்தை முற்றுகையிடவுள்ள காணாமல் போனவர்களின் உறவுகள்

வடக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக்கட்சியின் அலுவலக முன்றலில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கவுள்ளது

தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கத்தால்  ஏற்பாட்டில்  இன்று நண்பகல் 1.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

வடக்கு கிழக்கு முழுவதும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி அவர்களின் உறவுகள் 800 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனினும் இதுவரை அவர்களுக்கான தீர்வு அரசால் வழங்கப்படவில்லை இதனால் குறித்த விடயத்துக்கு தீர்வை பெற்று தருவதில்  தமிரசுக்கட்சி தடையாக உள்ளதாக தெரிவித்து மேற்குறித்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment