உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மரநடுகை

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு  மரநடுகைச் செயல்திட்டம் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தலைமையில் A9 வீதியின் மாங்குளம் 226 ஆவது மைல்கல் பிரதேசத்தில் இன்று இடம்பெற்றது. 

உலக சுற்றாடல் தினத்தை கொண்டாடும் முகமாக ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கும் செயற்திட்டங்களுக்கு வடமாகாணத்தின் பங்களிப்பு வழங்கும் நோக்கில் இந்த செயல்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

கொழும்பு - கண்டி பிரதான வீதியான A9 வீதியின் வவுனியா தொடக்கம் இயக்கச்சி வரையான வீதியின் இருமருங்கிலும்  மரக்கன்றுகள் நடும் நிகழ்வு இடம்பெற்றது.

A9 வீதியின் குறிப்பிட்ட பகுதியை பசுமை வீதியாக மாற்றும் ஆளுநரின் எண்ணக்கருவுக்கு அமைய இந்த மரநடுகைத் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திரு.பற்றிக் டிரஞ்சன் மேற்பார்வையில் பிரதேச சபைகளின் பராமரிப்பில் இடம்பெறும் இந்த திட்டத்தின் மாவட்ட ரீதியான நிகழ்வுகள் மாவட்டச் செயலர்களின் தலைமையில் வவுனியா மற்றும் ஆனையிறவுப் பிரதேசங்களில் இடம்பெற்றது.Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment