ரயில் தொழிற்சங்கத்தினருக்கும் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிற்கும் இடையில் தீர்மானமிக்க கலந்துரையாடலொன்று நடைபெறவுள்ளது.
இந்த கலந்துரையாடல் இன்று நிதி அமைச்சில் நடைபெறவுள்ளது. இந்த கலந்துரையாடலில் போக்குவரத்து அமைச்சரும் கலந்துகொள்ளவுள்ளார்.
சம்பளப்பிரச்சினையை தீர்ப்பதற்கு நிதி அமைச்சர் தவறிவிட்டதாக தெரிவித்து நேற்று நள்ளிரவு முதல் ரயில் ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடபோவதாக அறிவித்திருந்தனர்.
எனினும் நிதி அமைச்சருடனான கலந்துரையாடலுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டதை அடுத்து, இன்று பிற்பகல் 2 மணிவரையில் இந்த போராட்டம் பிற்போடப்பட்டிருந்தது.
மேலும் இன்றைய கலந்துரையாடலில் சாதகமான தீர்வு வழங்கப்படாவிட்டால், திட்டமிட்டபடி போராட்டம் நடத்தப்படும் என்று ரயில் ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
0 comments:
Post a Comment