வலயத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக இந்திய உளவுத்துறையுடன் இணைந்து செயற்பட்டுக்கொண்டிருப்பதாக இராணுவத்தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
மாதுருஓய விஷேட படை பயிற்சி பாடசாலையின் 49வது பிரிவின் விடுகை விழாவில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மாதுருஓய விஷேட படை பயிற்சி பாடசாலையின் பாடநெறியின் முக்கியத்துவம் தொடர்பிலும் இராணுவத்தளபதி இதன்போது கருத்து தெரிவித்தார்.
இந்தக் காலப்பகுதிக்குள் இலங்கை இராணுவத்திற்கு அதி விசேடமான தைரியமுள்ள அதிகாரிகள் மற்றும் வீரர்கள் இந்த பாடசாலையால் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
யுத்த காலப்பகுதியில் அவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தலைமைதத்துவம் காரணமாக பல வெற்றிகளை பெற்றுக்கொள்ள முடிந்ததாகவும் இராணுவத்தளபதி மஹேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment