இலங்கை பாதுகாப்பு தொடர்பான நம்பிக்கையை சர்வதேசத்திற்கு ஏற்படுத்துவதற்காகவே தனது அழைப்பின் பேரில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தற்போது இடம்பெற்றுவரும் ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தன்னைப்பற்றி தவறான செய்திகள் வருவதாகவும் ஜனாதிபதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
குறிப்பாக வெளிநாட்டு பயணங்கள் தொடர்பாக தவறான செய்திகள் வெளியிடப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் தான் தஜிகிஸ்தானுக்கு இரு ஆளுநர்கள் மற்றும் 3 நாடாளுமன்ற உறுப்பினர்களுடனேயே சென்றிருந்ததாகவும் ஆனால், 50 பேரை தான் அழைத்துச் சென்றதாக செய்திகள் வெளியாகியிருந்தனவென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment