யுவராஜூக்கு பிராட் வாழ்த்து

ஓய்வை அறிவித்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கிற்கு, இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
யுவராஜ் சிங் கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத போட்டி என்றால், 2007ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை டி20 போட்டியில் 6 பந்துகளில் 6 சிக்ஸர்களை அவர் பறக்கவிட்டதுதான். யுவராஜ் ஓய்வை அறிவித்துள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் இந்தப் போட்டியை நினைவு கூர்ந்து வருகின்றனர்.
தென்னாப்ரிக்காவின் டர்பன் நகரில் 2007ம் ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி இந்தப் போட்டி நடைபெற்றது. சிக்ஸர்களை விளாசியது யுவராஜ் சிங்கின் திறமைதான் என்றாலும், அவரை கோபமூட்டிய இங்கிலாந்து வீரர் பிளிண்டாப்க்கு அந்தப் பெருமையில் ஒரு பங்கு சேரும்.
அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 18 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து இருந்தது. அந்த நேரத்தில் யுவராஜ் சிங்கிற்கும், பிளிண்டாப்பிற்கும் இடையே ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டது. பிளிண்டாப் பேசிக் கொண்டே பீல்டிங் பக்கம் செல்ல, யுவராஜ் சிங் கோபமாக அவரை நோக்கி சென்றார். பின்னர் நடுவர் தலையிட்டு அவரை சமாதானப்படுத்தினார். 18வது ஓவரை பிளிண்டாப்தான் வீசி இருந்தார். அந்த ஓவரின் 4,5வது பந்தில் பவுண்டரி அடித்திருந்தார் யுவராஜ். இவருடன் தோனி இருந்தார்.
பிளிண்டாப் மூட்டிய கோபத்துடன் 19வது ஓவரை விளையாடினார் யுவராஜ் சிங். அந்த ஓவரை இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் பிராட் வீசினார். முதல் பந்திலேயே இமாலய சிக்ஸர் விளையாடினர். மைதானத்தை விட்டு பந்து வெளியே செல்ல கொஞ்சம் தூரம்தான். முதல் பந்தில் சிக்ஸர் அடித்ததுதான் தாமதம் அடுத்த 5 பந்துகளில் அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்டார்.
தன்னுடைய ஓவரில் 6 பந்துகளிலும் சிக்ஸர் விளாசப்பட்டதால் பிராட் நொந்துவிட்டார். சிக்ஸர் விளாசிய கையோடு 12 பந்துகளில் அரைசதம் விளாசினார். இந்திய அணி அந்தப் போட்டியில் 4 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்தது. யுவராஜ் 16 பந்துகளில் 58 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி 200 ரன்கள் மட்டுமே எடுக்க இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி20 வரலாற்றில் 6 பந்தில் 6 சிக்ஸர்கள் விளாசியது அதுவே முதன்முறை.
இந்நிலையில், ஓய்வை அறிவித்துள்ள யுவராஜ் சிங்கிற்கு ஸ்டுவர்ட் பிராட் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “ஓய்வை என்ஜாய் பண்ணுங்கள் லெஜண்ட்” எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் 6 சிக்ஸர்கள் விளாசப்பட்ட போட்டியில் யுவராஜ் உடனான படத்தையும் பதிவிட்டுள்ளார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment