மிகப் பெரிய போராளி” - வாழ்த்து மழையில் யுவராஜ் சிங்

இந்திய கிரிக்கெட் அணி வீரர் யுவராஜ் சிங் ஓய்வு அறிவித்தற்கு சக வீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணியில் மிகவும் சிறப்பான நடுகள ஆட்டக்காரராக திகழ்ந்தவர் யுவராஜ் சிங். இவர் இந்தியாவிற்காக 304 ஒருநாள் போட்டிகள், 40 டெஸ்ட் போட்டிகள், 58 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்நிலையில் இவர் இன்று சர்வேதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இதனையடுத்து அவரது 17ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. இவர் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய உலகக் கோப்பையை வெல்ல காரணமாக இருந்தார்.
யுவராஜ் சிங்கின் ஓய்வு முடிவிற்கு சகவீரர்கள் மற்றும் முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, “உங்களுடைய சிறப்பான கிரிக்கெட் வாழ்க்கைக்கு எனது பாராட்டுகள். நீங்கள் பல சிறப்பான தருணங்கள் மற்றும் பல வெற்றிகளை எங்களுக்கு தந்துள்ளீர்கள். நீங்கள் ஒரு சாம்பியன் வீரர்” எனப் பதிவிட்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மண், “உங்களுடன் விளையாடியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. நீங்கள் இந்த விளையாட்டில் ஒரு சிறப்பான வீரராக திகழ்ந்தீர்கள். அத்துடன் பலருக்கு முன்னுதாரணமாக இருந்தீர்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
முன்னாள் வீரர் விரேந்திர சேவாக், “கிரிக்கெட் விளையாட்டில் நிறையே வீரர்கள் வருவார்கள், போவார்கள். ஆனால் யுவராஜ் சிங் மாதிரி ஒரு வீரர் இனி வருவது கடினம். பல இக்கட்டான சூழ்நிலைகளை தனது ஆற்றலால் வென்று சாதித்து காட்டியவர் யுவராஜ்” என ட்வீட் செய்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, “இது சகாப்தத்தின் நிறைவு. உங்களுடைய சிக்சர்கள், கேட்சுகள் மற்றும் நான் உங்களுடன் இருந்த தருணங்கள் மறக்க முடியாதவை. நீங்கள் எப்போதும் பலருக்கு முன்னுதாரணமாக இருப்பீர்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரரும் யுவராஜ் சிங்கின் நெருங்கிய நண்பருமான முகமது கைஃப், “கிரிக்கெட் உலகில் தலைசிறந்த வீரர், ஒரு மிகப் பெரிய போராளி. நீங்கள் நாட்டிற்காக சாதித்ததை நினைத்து நாடு பெருமை கொள்ளும்” எனப் பதிவிட்டுள்ளார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment