மேற்கு இந்தியத்தீவுகளை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா-மேற்கு இந்தியதீவுகள் அணி மோதிய நேற்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இறுதிவரைக்கும் போராடியே தோற்றுப்போனது மேற்கு இந்தியதீவுகள். 


இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் உலகக்கிண்ணம் தொடரின் 10 வது லீக் போட்டி நேற்று இடம்பெற்றது.


இதில் நாணையச் சுழற்சியில் வெற்றி பெற்ற மேற்கு இந்தியத்தீவுகள் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆஸ்திரேலிய அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 288 ஓட்டங்களை குவித்தது.


ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக நாதன் கொல்டர்-நைல் 92 ஓட்டங்களை குவிந்திருந்தார். மேற்கு இந்தியத் தீவுகள் அணி சார்பில் கார்லோஸ் ப்ராத்வாட் 3 விக்கெட்டுகளையும், ஓஷேன் தாமஸ், ஷெல்டன் கோட்ரெல், ஆண்ட்ரே ரசல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஜேசன் ஹோல்டர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தியிருந்தனர்.


இதனையடுத்து 288 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய மேற்கு இந்தியத் தீவுகள் அணியில் ஷாய் ஹோப் 68 (105), ஜேசன் ஹோல்டர் 51(57) தவிர மற்ற வீரர்கள் நிலைக்க தவறியதால், அணி தடுமாற ஆரம்பித்தது.


கடைசி நேரத்தில் மளமளவென விக்கெட்டுகள் சரிந்ததால், 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 273 ஓட்டங்களை மட்டுமே அணி குவிந்திருந்தது.


ஆஸ்திரேலிய அணி சார்பில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுகளையும், பாட் கம்மின்ஸ் 2 விக்கெட்டுகளையும், ஆடம் சாம்பா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி வெற்றி வாகை சூடியது.

Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment