கல்முனை போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கிழக்கில் ஹர்த்தால்

கல்முனை பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறு வலியுறுத்தி மதத்தலைவர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது.
அதற்கமைய கிழக்கின் பல பகுதிகள் இன்று   மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்படுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை தரமுயர்த்தக்கோரி முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கிழக்கு மாகாணத்தில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள வர்த்தக நிலையங்களை மூடி உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு வழங்குமாறு கிழக்கு மாகாண மாணவர் பேரவை துண்டுப்பிரசுரங்கள் மூலம் அழைப்பு விடுத்திருந்தது.
அதற்கமையவே மட்டக்களப்பில் இன்று பூரண ஹர்த்தால் கடைப்பிடிக்கப்படுகிறது. 
மட்டக்களப்பிலுள்ள கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதோடு, போக்குவரத்துச் சேவைகள் மட்டுப்படுத்தபட்டுள்ளதாகவும்  
மேலும் பாடசாலைகளுக்கு மாணவர்களின் வருகையும் மிகவும் அரிதாகவே காணப்பட்டதாகவும்  கூறப்படுகிறது .
அம்பாறை, கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்துமாறுக் கோரி மதகுருமார்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை திங்கட்கிழமை 9 மணியளவில் ஆரம்பித்திருந்தனர்.
கல்முனை சுபத்திரா ராமய விகாராதிபதி ரன்முத்துகல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கையின் இந்துகுருமார் ஒன்றியத்தலைவர் சிவஸ்ரீ.க.கு.சச்சிதானந்த சிவம் குருக்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான அழகக்கோன் விஜயரெட்ணம், சந்திரசேகரம் ராஜன் உள்ளிட்டோர் குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் ஆதரவு வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment