ஜனாதிபதி வேட்பாளர் குறித்து அறிவித்தார் மஹிந்த!

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் தாமரை மொட்டுச் சின்னத்திலிருந்தே வேட்பாளர் களமிறக்கப்படுவார் என்று எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
மேலும், இதுகுறித்து தற்போது பேச்சுக்கள் இடம்பெற்று வருவதாகவும் விரைவில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாத்தரையில் நேற்று  இடம்பெற்ற நிகழ்வொன்றையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், “பொதுஜன பெரமுன சார்பில், தாமரை மொட்டுச் சின்னத்தில் இருந்துதான் அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் களமிறக்கப்படுவார்.
எனினும், இதுகுறித்து பேச்சுவார்த்தை தொடர்ச்சியாக இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. பேச்சுவார்த்தையின் இறுதியிலேயே அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனும் நாம் பேச்சுவார்த்தை நடத்துவோம். இதில் எந்தவொரு குழப்பமும் இடம்பெறவில்லை.
அத்தோடு, ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் சஜித் பிரேமதாஸ ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்குவார் என்று தற்போது கூறப்படுகிறது.
அவர் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க நாம் எப்போதும் எதிர்ப்பினை தெரிவிக்க மாட்டோம். ஆனால், ஜனாதிபதியாவதை ஒட்டுமொத்த நாடும் எதிர்க்கும். அத்தோடு, கோட்டாவுக்கு எதிராக தற்போது 10 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
ஒருவேளை அவர் வேட்பாளராக களமிறங்கினால் இன்னும் அந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம்” என மேலும் தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment