மழையால் நின்று போனது தென்னாபிரிக்கா-மேற்கிந்தியத் தீவுகள் ஆட்டம்

உலகக்கோப்பை கிரிக்கெட் 15 ஆவது லீக் ஆட்டமான தென்னாபிரிக்கா - மேற்கிந்தியத் தீவுகள் ஆட்டம் நேற்று மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.

தென்னாபிரிக்கா தான் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. இதனையடுத்து நேற்றைய போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற கட்டாய நிலையில் மேற்கிந்தியத் தீவுகளை எதிர்கொண்டது.


நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற  மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து தென்னாபிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

 தென்னாபிரிக்கா அணியின் ஆரம்ப ஆட்டக்காரர் ஆம்லா 6 ஓட்டங்களிலும் அதனையடுத்து மார்க்கம் 5 ஓட்டங்களிலும் அவுட் ஆனதால் 7.3 ஓவர்களில் தென்னாபிரிக்கா அணி 29 ஓட்டங்களுக்குள் 2 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.
இந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது. இதையடுத்து நீண்ட நேரம் ஆகியும் மழை நிற்காததால் போட்டி இரத்து செய்யப்பட்டது என நடுவர்கள் அறிவித்தனர்.  

எனவே இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். போட்டி இரத்தானதால் தென்னாப்பிரிக்கா தனது முதல் புள்ளியை பெற்றுள்ளது. ஏற்கனவே இதே தொடரில் இலங்கை-பாகிஸ்தான் போட்டி மழையால் இரத்துச் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment