கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு பார்வையாளர்கள் வருகை தருவதற்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தின் வருகை தரும் பகுதி மற்றும் புறப்படும் பகுதிகளுக்கு பயணிகளுடன் மேலும் இரண்டு நபர்கள் வருகை தருவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை விமான நிலைய மற்றும் விமான சேவைகளின் தலைவர் தம்மிக்க ரனதுங்க தெரிவித்துள்ளார்.
கடந்த 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததுடன் பயணிகள் தவிர்ந்த ஏனையவர்களுக்கு விமான நிலையத்திற்குள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment