கிழக்கு தனியார் பல்கலையை அரசுக்கு சுவீகரிக்க முடியுமா?

மட்டக்களப்பு பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள தனியார் பல்கலைக்கழகத்தை, பல்கலைக்கழக சட்டத்தின் 70 (எப்) சரத்தின் கீழ் அரசாங்கத்துக்குச் சுவீகரித்துக் கொள்ள இடம்பாடுகள் உள்ளதா எனப் பரீட்சித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க சட்ட மா அதிபருக்கு நேற்று ஆலோசனை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சட்ட மா அதிபர் ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல லிவேராவுக்கு எழுத்து மூலம் இந்த அறிவிப்பை விடுக்குமாறு பிரதமரினால், பிரதமரின் செயலாளர் சமன் ஏகநாயக்கவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் பிரதமர் செயலக வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
குறித்த நிறுவனத்தின் உரிமையாளர் தொடர்ந்து
ம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்தது போன்று இனங்களுக்கும், சமயங்களுக்கும் இடையில் அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் சிறு அறிவிப்புக்களை வெளியிட்டு வருவதாயின், பல்கலைக்கழக சட்டத்தின் 70 (எப்) சரத்தின்படி, அந்த உரிமையாளரினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்கலைக்கழகத்தை அரசுக்குச் சுவீகரித்துக் கொள்ள முடியுமா? என்பதைக் கண்டறிந்து அறிக்கை சமர்ப்பிக்குமாரே பிரதமர் சட்ட மா அதிபரிடம் கோரியுள்ளதாகவும் மேலும் தெரியவருகிறது.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment