பிரெக்ஸிற் திட்டங்களில் ஜோன்சன் மற்றும் ஹண்ட் இடையே பிரிவினை!

பிரெக்ஸிற் திட்டங்கள் குறித்த விடயத்தில் கொன்சர்வேற்றிவ் கட்சியின் தலைமைத்துவ போட்டியாளர்களான பொரிஸ் ஜோன்சன் மற்றும் ஜெரமி ஹண்ட் ஆகியோரிடையே முரண்பாடு நிலவுகிறது.
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு எப்போது எவ்வாறு வெளியேற வேண்டுமென்பது தொடர்பாக இரு போட்டியாளர்களும் வேறுபட்ட கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானியா எட்டிய பிரெக்ஸிற் ஒப்பந்தத்தை மீண்டும் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்த முடியுமென இரு போட்டியாளர்களும் தெரிவித்து வருகின்றனர்.
ஆனாலும் தெரேசா மே-யுடன் எட்டப்பட்ட பிரெக்ஸிற் ஒப்பந்தம் எக்காரணத்தைக் கொண்டும் மீண்டும் பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்படாது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்து வருகிறது.
ஒப்பந்தம் ஒன்றுடனோ ஒப்பந்தமின்றியோ ஒக்ரோபர் 31 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது உறுதியென ஜோன்சன் கூறியுள்ளார்.
இந்த திகதி சாத்தியமற்ற காலக்கெடு எனவும் பாராளுமன்றம் உடன்பாடற்ற பிரெக்ஸிற்றை நிராகரிக்கும் பட்சத்தில் பொதுத்தேர்தல் ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளதாகவும் ஹண்ட் தெரிவித்துள்ளார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment