ஜப்பானில் தொழில் வாய்ப்பு – எவரிடமும் ஏமாந்து விட வேண்டாம்

ஜப்பானில் புதிய தொழில் வாய்ப்பு தொடர்பில் அந்தந்த விடயங்களுக்கான தகுதி மற்றும் விதிகள் தொடர்பில் அறிவிக்கப்படவுள்ளது. அது வரையில் எந்தவொரு நிறவனத்திலோ அல்லது நபரிடமோ ஏமாந்து விடக் கூடாது என்று பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார சுட்டிக்காட்டினார்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மகாநாட்டில் உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார்.
இது தொடர்பாக தேவையான தகுதி மற்றும் மொழியாற்றல் குறித்து தற்பொழுது ஜப்பான் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்ததை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
ஜப்பானுக்கும் இலங்கைக்கும் இடையிலான புதிய தொழில் வாய்ப்பின் கீழ் 14 துறைகளுக்காக எம்மால் பணியாளர்களை ஜப்பானுக்கு அனுப்ப முடியும்.
கப்பல் இயந்திர உபகரணங்கள் துறை, விமான சேவை தொழிற்துறை, இலத்திரனியல் தொழிற்துறை, தகவல் தொழில்நுட்பம் உணவு பான தயாரிப்பு, கடற்றொழில் மற்றும் நீரியல்வள உற்பத்தி, கைத்தொழில் துறை, கட்டிட நிர்மாணம், தொழில்நுட்ப இயந்திர உபகரணங்கள், இயந்திர உதிரிப்பாகங்களை ஒன்றிணைத்தல், பராமரிப்பு சேவை, கட்டிடங்களை சுத்தம் செய்தல், முகாமைத்துவம், வாகனங்கள் பராமரிப்பு சேவை, தங்குமிட சேவை, உணவு சேவை, தொழிற்துறை உள்ளிட்ட 14 துறைகளில் இலங்கைப் பணியாளர்களுக்கு தொழில் வாய்ப்புகள் உண்டு.
இவை ஜப்பானின் பல்வேறு அமைச்சுகளுக்கு உட்பட்டதாக அமைந்துள்ளது.
இவை அனைத்து தகவல்களையும் ஒரே முறையில் வழங்குவதற்கு ஜப்பானின் எந்தவொரு நிறுவனமும் தொடர்புபடவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
ஜப்பான் அரசாங்கத்துடன் நாம் உடன்படிக்கையை மேற்கொண்டதை அடுத்து அந்நாட்டில் ஏனைய அமைச்சுகளுக்கான தொழில் வாய்ப்புகளுக்கான தேவையான தகுதிகளை உள்ளடக்கிய விடயங்கள் குறித்து இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் தற்பொழுது பேச்சுவார்ததை நடத்தி வருகின்றார்.
ஒவ்வொரு விடயத்துடன் தொடர்புபட்ட துறைக்கு தேவையான தகுதி எமக்கு தனிதனியாக விடயங்களை குறிப்பிட வேண்டியுள்ளது. இவை தொடர்பில் தீர்மானத்தை மேற்கொண்டு உடன்பாட்டுக்கு நாம் வரவில்லை. வயதெல்லை ஜப்பான் வயது வரையறைக்கு உட்பட்டதாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த 14 துறைகளுக்கும் தேவையான தொழில் அனுபவத்தை கொண்ட இளைஞர் யுவதிகளை நாம் அடையாளம் காண வேண்டும் இதே போன்று அந்தந்த துறைக்கு தேவையான எண்ணிக்கையில் இந்த சம்பந்தப்பட்ட அனைவரும் ஜப்பான் மொழியில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியமாகும். இந்த அளவிற்கு எம்மை நாம் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டும். வெறுமனே எம்மால் ஜப்பான் செல்ல முடியாது.
இதன் காரணமாக இதற்கு தேவையான கல்வி தகுதியை பெற்றுக்கொள்வது மிக முக்கியமானதாகும். பன்னிப்பிட்டி மற்றும் எமது ஏனைய பயிற்சி மத்திய நிலையங்களில் நிவாரண கட்டணத்தில் கற்கை நெறிகளை பயில முடியும்.  இதே போன்று எந்தவாரு தனியார் நிறுவனத்திற்கும் அல்லது நபர்களுக்கு இது தொடர்பிலான பொறுப்புகள் வழங்கப்படவில்லை.
இதன் காரணமாக நபர் ஒருவருக்கு அல்லது நிறுவனத்திற்கு இது தொடர்பில் விண்ணப்பம் அல்லது பணத்தை வழங்குவதினால் பயனில்லை.  எந்தவொரு முகவர் நிலையமும் அல்லது நபர்களோ இதற்காக தெரிவு செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
தனிப்பட்ட நிறுவனம் அல்லது நபர்களுக்கு இது தொடர்பில் எந்த வித பொறுப்பும் ஒப்படைக்கப்படவில்லை. இதனால் மோசடிக்காரர்களிடம் சிக்க வேண்டாம் என அவர் மேலும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment