லாட்டரியில் நபருக்கு கோடிக்கணக்கில் அடித்த அதிர்ஷ்டம்!

தென் ஆப்பிரிக்காவில் லாட்டரியில் தந்தைக்கு கோடிக்கணக்கில் விழுந்த பரிசு பணத்தை மகன் திருடிய நிலையில் அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மிக்சத்சனே ஜார்ஜ் என்பவர் ஏழ்மையான நிலையில் வாழ்ந்து வந்த நிலையில் கடந்த 2006-ல் லாட்டரியில் அவருக்கு கோடிக்கணக்கான பரிசு விழுந்தது.
இந்த பணத்தை வைத்து பெரிய விடுதி கட்டிடத்தை கட்டலாம் என ஜார்ஜ் கனவு கண்ட நிலையில் அவருக்கு விழுந்த பரிசு பணத்தை யாரோ கொளையடித்து சென்றனர்.
இந்த சமயத்தில் அவரின் இரண்டு மகன்களான ஜமானி மற்றும் சாமுவேல் ஆகியோர் காணாமல் போனார்கள்.

சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணை நடத்தி வந்த போது சாமுவேல் மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார்.
இதோடு ஜார்ஜுக்கு லாட்டரியில் விழுந்த பணத்தை அவரின் மகன் ஜமானி தான் திருடினார் என தெரியவந்தது.
இதையடுத்து ஜமானியை பொலிசார் கைது செய்தனர்.
அவர் மீதான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் ஜமானிக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் சாமுவேலை ஜமானி தான் கொலை செய்தாரா அல்லது வேறு நபர்களால் கொல்லப்பட்டாரா என்ற விபரம் இன்னும் தெரியவில்லை.
இது தொடர்பாக ஜார்ஜ் அளித்துள்ள பேட்டியில், லாட்டரில் விழுந்த கோடிக்கணக்கான பணம் என் குடும்பத்தையே சிதைத்து விட்டது.
எங்களுக்கு நிம்மதியே இல்லை, ஒரு மகன் கொலை செய்யப்பட்டுவிட்டான், இன்னொரு மகன் சிறையில் உள்ளான்.
மகன் சிறையில் இருப்பதை என்னால் தாங்கி கொள்ளமுடியவில்லை. எனக்கு விழுந்த பரிசு பணத்தை அவன் திருடினாலும் அவன் என் மகன் தான்.
தனது தவறை இப்போதாவது அவன் உணர்வான் என நம்புகிறேன். கோடிக்கணக்கில் பரிசு விழுந்தும் நான் ஏழையாகவே இருக்கிறேன் என கூறியுள்ளார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment